கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்- நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06003) வரும் 13ம் தேதி மற்றும் நவம்பர் 3ம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.  

 அதேபோன்று நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06004) வரும் 17ம் தேதி மற்றும் நவம்பர் 7ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.  இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>