கடலில் தத்தளித்த 9 பேர் மீட்பு

சென்னை:  அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா எனும் பாய்மர கப்பலில் 9 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 170 என்எம் மற்றும் மாலத்தீவில் இருந்து 230 என்எம் தொலைவில் இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக எச்சரிக்கை அனுப்பி கடந்த 5ம் தேதி உதவி கோரினர்.  அதையடுத்து, சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி), இரண்டு மீட்புக் கப்பல்கள் அனுப்பப்பட்டு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 9 பேர் கொண்ட குழுவினரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், மாலத்தீவு துறைமுகம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Stories:

More
>