அதிமுக கோஷ்டி மோதல் வழக்கு ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல்

மதுரை: அதிமுக கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் ராஜேந்திரபாலாஜி உள்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி மற்று 4 பேர்  தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி பி.புகழேந்தி முன்பு மூத்த வக்கீல் அஜ்மல்கான் நேற்று ஆஜராகி, ‘‘ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளோம். இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதி,  ‘‘மனுவை படித்து பார்த்த பின்னரே விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என கூறியுள்ளார்.

Related Stories:

More
>