×

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பூந்தமல்லி: தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய உணவு பாதுகாப்பு குறித்த 3 சட்டங்களை நிறைவேற்றும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்டவைகளில் உள்ள உணவு கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும், ஆலோசனைக் கூட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமை வகித்தார்.  

இதில் ஓட்டல் மற்றும் உணவு கூடங்களுக்கான “உண்ண உகந்த வளாக சான்றிதழ்”, சுகாதார மதிப்பீடு, தர சான்றிதழ், சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் தடுப்போம், உபயோகித்த எண்ணெயின் மறு பயன்பாடு, கலப்பட உணவுப் பொருட்களை கண்டறிதல், உப்பு, சக்கரையை குறைத்து பயன்படுத்துதல், செயற்கை நிறமூட்டிகளை தவிர்த்தல் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் குறித்த மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள விதிகளைப்பின்பற்றுவது, அதற்கான வழிமுறைகள், நடைமுறை சிக்கல்கள், பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேலவன், ராஜா முகமது, ரவிச்சந்திரன், செல்வராஜ், கஸ்தூரி, சிவசங்கரன், வெங்கடேசன், கார்மேகம், ஜெயவேல், இளங்கோவன், பரிக்சன் மேலான் இயக்குநர் காயத்ரி, கஸ்தூரி, சர்மிளா, நோ புட் வேஸ்ட்டேஜ் நிர்வாகி அருண் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Food Safety Department , Awareness meeting on safe food on behalf of the Food Safety Department
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...