×

திமுக கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து கும்மிடிப்பூண்டி வேணு தீவிர பிரசாரம்

ஊத்துக்கோட்டை: பூண்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து கும்மிடிபூண்டி கி.வேணு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் 3வது வார்டு திமுக வேட்பாளர் காண்டீபனை ஆதரித்து உயர் மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் கும்மிடிபூண்டி கி.வேணு, மாநில தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று மாம்பாக்கம் பகுதியில் 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது, இவர்களுடன் பொறுப்பு குழு உறுப்பினர் பகலவன், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், அண்ணாமலை, முன்னாள் அவைத்தலைவர் வேணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Gummbundi ,Vennu ,Thimam Councillor , Gummidipoondi Venu intense campaign in support of DMK councilor candidate
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...