பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அரசு கலைக்கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏழை, எளிய மாணவர்களுக்கு இடம் அளிக்க மறுத்து குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் பெற்று கொண்டு மாணவர் சேர்க்கை அளிப்பதாகவும், சிபாரிசுகள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதாக குற்றம் சாட்டினர். மேலும் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி பயில விண்ணப்பித்திருந்த நிலையில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எஞ்சிய மாணவர்கள் உயர்கல்வியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் இரண்டு அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாவட்டத்தில் கூடுதலாக அரசு கலை கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பள்ளிப்படிப்பை முடிக்கும் அனைத்து ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டனர்.

Related Stories:

More
>