பேருந்து, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பேன்: திமுக வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் வாக்குறுதி

மதுராந்தகம்: கிராம பகுதிகளில் பேருந்து, சாலை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பேன் என மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடும் ராஜா ராமகிருஷ்ணன் மக்களுக்கு வாக்குறுதியளித்தார். செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 19வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் தரணி பாஸ்கரன் ஆகியோரை ஆதரித்து சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் காட்டுதேவாதூர், நெட்ரம்பாக்கம், சின்னவெண்மணி உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கிராம மக்களிடையே பேசுகையில், ‘திமுக சார்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெற செய்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். உங்களில் ஒருவனாக உங்களது ஊராட்சியில் உள்ள பிரச்னைகளை தீர்வு காண உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் பெற்று தருவேன். பேருந்து, வசதி சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுப்பேன்’ என உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் சசிகுமார், ஆர்.சங்கர், ஆர்.செல்வநிதி ராமகிருஷ்ணன், திருவிக நகர் வடக்கு பகுதி துணை செயலாளர் ராஜன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், முன்னாள் மன்ற உறுப்பினர்கள் வீரமணி, வழக்கறிஞர் குமாரசாமி, மாவட்ட பிரதிநிதி சதீஷ், அவைத்தலைவர் மதியழகன், ஞானசேகர் கௌதம், காட்டுதேவாதூர் நிர்வாகிகள் சக்திவேல், ரவி, கோதண்டம், பிரசாத், சர்மா, ஜெய்சங்கர், நெட்ரம்பாக்கம் நிர்வாகிகள் ஹரி, கிருஷ்ணன், விஜயகுமார், மனோகரன், டில்லி, ஏகாம்பரம், வீரராகவன், தட்சிணாமூர்த்தி, சின்னவெண்மணி நிர்வாகிகள் பெருமாள், பிரகாஸ், தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: