×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு: திமுக வேட்பாளர் பூங்கோதை ராஜனை ஆதரித்து சூறாவளி பிரசாரம்

செங்கல்பட்டு: கொட்டும் மழையிலும் திமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பூங்கோதை ராஜனை ஆதரித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் சூறாவளி பிரசாரம். அவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 5வது வார்டு  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி செயலாளரும், மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளருமான கே.பி. ராஜனின் மனைவி பூங்கோதை ராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் 14,15,22,23,24 உள்ளிட்ட வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சி.எம். கதிரவன், சசிகலா சண்முகம், சங்கமித்திரை கருணாகரன், தரணிகோபி, பிரேமலதா பிரேம்குமார் ஆகியோர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்.

மேலும், மேலமையூர், வல்லம் பட்டரவாக்கம், அஞ்சூர், பரனூர், திருவடிசூலம், தென் மேல்பாக்கம், கொண்டமங்கலம், செட்டிபுண்ணியம், ஆத்தூர், கொளத்தூர், வெங்கடாபுரம், ரெட்டிபாளையம், பாலூர், சிங்கப்பெருமாள் கோவில், கருநீலம், காயரம்பேடு, குருவன்மெடு, வில்லியம்பாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், ஒழலூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்தில் கவனித்து பொறுமையாக நிதானமாக  யோசித்து வாக்குகளை செலுத்தி அதிக வாக்குகள் வித்யாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க கோரி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உடனிருந்தார்.

Tags : Minister ,Kattagollathoor ,Union ,DMK ,Poonkothai Rajan , Minister intensifies vote collection in pouring rain in Kattagollathoor Union: Hurricane campaign in support of DMK candidate Poonkothai Rajan
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...