நீட் தேர்வு விவகாரம் தமிழக எம்பிக்கள் குழு பினராயுடன் சந்திப்பு

திருவனந்தபுரம்: நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பாஜ அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், கேரள அரசின் ஆதரவை பெறுவதற்காக திமுக எம்பி இளங்கோவன் தலைமையிலான குழுவினர் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர்கள் முதல் பினராய் விஜயனிடம் வேண்டுகோள் விடுத்தனர். சந்திப்பின் போது தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

More
>