×

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் யார் உள்ளே? யார் வெளியே? களத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப்

துபாய்: ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் முதல் 3 இடங்களுக்கான அணிகள் உறுதியான நிலையில் 4வது இடத்துக்கான போட்டியில் இன்று கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் களம் காணுகின்றன. கொரோனா தொற்றால் இந்தியாவில் தள்ளி வைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, பெங்களூர் அணிகள் 3 முன்னேறியுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகும் 4வது அணி எது என்பதை  இன்றும் நாளையும் நடைபெறும் ஆட்டங்கள் உறுதி செய்யும். நான்காவது இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப்,ராஜஸ்தான் என 4 அணிகள் உள்ளன.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று  இரவு நடைபெறும் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் கொல்கத்தா பிளே ஆப்  வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளும். தோற்றால் ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். அந்த அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்று மாலை  தங்கள் கடைசி  லீக் ஆட்டத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சென்னை ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டாலும் முதல் 2 இடங்களை உறுதி செய்ய வெற்றி அவசியம். சென்னை தோற்றால் பஞ்சாப் அணியும் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும். அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்வி என 10புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. இந்த 3 அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு, நாளை மோதும் டெல்லி-மும்பை அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து முடிவாகும். மும்பை வென்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்வது அவசியம்.  இந்த 4 அணிகளில் யார் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகிறார்கள் என்பதை இன்றும், நாளையும் நடக்கும் ஆட்டங்கள் முடிவு செய்யும். அதில் வெற்றி மட்டுமல்ல ரன் ரேட்டும் யார் உள்ளே? யார் வெளியே என்பதை இறுதி செய்யும்.


Tags : IPL ,Kolkata ,Rajasthan ,Punjab , Who is inside the IPL play-off round? Who's out? Domain Kolkata, Rajasthan, Punjab
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்