×

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! முழுமையான வழிகாட்டல்

நன்றி குங்குமம் தோழி

ஒருவர் வேலையில் இருப்பதற்கும், தொழில்முனைவோராய் இருப்பதற்கும் இடையிலான சாதக, பாதகங்கள் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை சுய பரிசோதனையின் மூலம் பார்க்கலாம்.

தொழில்முனைவு செய்வது என்பது எந்தளவிற்கு உற்சாகம் அளிக்கிறதோ, அதே அளவிற்கு நம் உழைப்பையும், ஆற்றலையும் கோரும் விஷயம். ஏன் என்றால், அவ்வளவு வேலை செய்ய வேண்டும், அவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும். சில நேரங்களில் சில அடிகள் பின்னால் வைக்க வேண்டியது வரும். அப்போதெல்லாம் சோர்வடையாமல் அடுத்தென்ன என்பதைப் பார்த்துக் கொண்டு முன்னால் சென்று கொண்டேஇருக்க வேண்டும்.

தொழில்முனைவு செய்வதற்கு முதலில் நம் மனநிலையைத் தயார்படுத்த வேண்டும். அதாவது, இங்கு முதலாளி மற்றும் முதன்மையான தொழிலாளி இரண்டுமே நாம்தான். முக்கியமான முடிவுகளை நாம்தான் எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும் நாம்தான் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஒரு தொழில்முனைவோருக்கான இதயம்தான் நமதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான ஒரு வினாப்பட்டியலாக இதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையில் என்ன மாற்றம் தேவை என்பதை இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதிலை வைத்துத் தீர்மானிக்கலாம்.

உங்களிடம் தொழில்முனைவோருக்கான தகுதி இருக்கிறதா?

1.போட்டின்னு வந்துட்டா என்ன பண்ணுவீங்க? ஒரு போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும் பாஸிட்டிவா மட்டுமே எடுப்பீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

2.‘‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்/வெள்ளைக்காரியா இருக்கணும்! அதை முடிக்கும் வரையில் ஓய மாட்
டேன்”னு சொல்ற டைப்பா நீங்க? இதனால உங்கள் உடல்/மனநிலை பாதித்தாலும், அதை முடிக்காமல் இருக்க முடியாது என்று சொல்பவரா நீங்கள்?
அ.ஆம்    ஆ. இல்லை

3.ஒரு வேலைன்னு வந்துட்டா அதைப் பத்தி யோசிச்சு செயல்படுறது நல்ல விஷயம். ஆனா, யோசிச்சு யோசிச்சு யோசிச்சு யோசிச்சு... அந்த விஷயத்தை தள்ளிப் போடுவீங்களா?
அ. ஆம் ஆ. இல்லை

4.ஒரு விஷயம் நடக்கும் போது, அது நல்லதோ கெட்டதோ, ரொம்ப டென்ஷன் ஆவீங்களா?
அ. ஆம் ஆ. இல்லை

5.புது மனுஷங்களைப் பார்ப்பது, அவர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுறது, அவங்ககூட சகஜமா பேசுறது எல்லாம் ஈஸியான வேலைதானா?
அ. ஆம்    ஆ. இல்லை

6.முறையா ஒரு ஷெட்யூல் போட்டு, நேரத்துக்கு வேலையைச் செய்யுற ஆளா நீங்க?
அ. ஆம்    ஆ. இல்லை

7.‘ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்டுற மாதிரி’ன்னு சொல்ற டைப்பா நீங்க?
அ. ஆம்    ஆ. இல்லை

8.ஒரு வேலையை செய்றதோட நிறுத்திக்கலாம். அதோட விளைவுகள வேற யாரோ பாத்துக்கட்டும்னு நினைப்பீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

9.நீங்க எப்பவுமே வாழ்க்கைல நல்லது மட்டுமே நடக்கணும்னு நினைக்குறவங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

10.அப்படியே எதாவது கெட்டது நடந்தாலும், அத நல்ல ஒரு வாய்ப்பா மாத்திக்குற மனசா உங்களோடது?
அ. ஆம்    ஆ. இல்லை

11.‘என்னோட வேலையை நானே பார்த்துப்பேன். யாரும் சொல்லத் தேவைஇல்லை!’ அப்டின்னு சுயம்புவா, எல்லா
வேலைகளையும் பொறுப்போட வேற யாரும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லாம சரியா செஞ்சு முடிக்குற நபரா நீங்க?
அ. ஆம்    ஆ. இல்லை

12.‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்(ள்) நான்’ டைப்பா நீங்க?
அ. ஆம்    ஆ. இல்லை

13.அப்படி நினைச்சத செய்யுறதுக்கு என்ன ஆனாலும் பண்ண, கம்ஃபர்ட்ஸோன விட்டு வெளியேறவும் தயாரா இருக்கீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

14.எந்த ஒரு பிரச்சனைக்கும் வித்தியாசமான, சுலபமான வழியைக் கண்டுபிடிச்சுடுற ஆளா நீங்க? எந்தப் பிரச்சனைனாலும், உங்க நண்பர்கள், நண்பர்களோட நண்பர்கள் எல்லாம் உங்ககிட்டதான் ஐடியா கேப்பாங்களா? அதுவும் அவங்களுக்காக யோசிக்குறத விருப்பத்தோட பண்ணுவீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

15.ஒரு வேலைல “முடியாது/சாரி வேண்டாம்”னு உங்க பொருள்/சேவைக்கு யாராவது பதில் சொன்னா, பேசிப்பேசி அவங்கள சரி
பண்ணிடுவீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

16.‘நான் ஏன் இந்தத் தொழில் பண்ணணும்?’ இந்தக் கேள்விக்கான ஆழமான, வலிமையான காரணங்கள் உங்ககிட்ட இருக்கா?
அ. ஆம்    ஆ. இல்லை

17.ஒவ்வொரு இடத்துக்குப் போனாலும், ஃப்ரீயா சுத்திட்டோ, போன வேலையை மட்டும் செஞ்சுட்டு வராம, அங்க எப்படியெல்லாம் வேலை நடக்குதுன்னு கவனிச்சு, அதுல இருந்து ஐடியாவெல்லாம் சேகரிக்குற ஆளா நீங்க?
அ. ஆம்    ஆ. இல்லை

18.உங்ககூட வேலை பாக்குறவங்க எல்லாரும் இந்த விஐபி படம் தனுஷ் கூட ஜாலியா பேசுற மாதிரி பேசிட்டு இருப்பாங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

19.ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா எதாவது ட்ரை பண்ணணும்னு யோசிப்பீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

20.ஒவ்வொரு பைசாவை செலவழிக்கும் போதும், பாபநாசம் கமல் மாதிரி தெளிவான ரெக்கார்ட்ஸ் மெய்ன்டெய்ன்
பண்ணுவீங்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

21.எதிர்பார்க்காமல் வரும் சர்ப்ரைஸ், திருப்பங்களை எல்லாம் ஆச்சரியத்துடன், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வீர்களா? ஏன் அப்படியான எதிர்பாராத விஷயங்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா?
அ. ஆம்    ஆ. இல்லை

22.ஒரு பிசினஸின் முக்கியமான நோக்கம் பணம் என்று நினைக்கிறீர்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

23.வாடிக்கையாளர்தான் முதலாளி, நாம் வேலை செய்யவும் அவர்களுக்கு உதவவுமே இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

24.‘என் வாழ்க்கை என் கையில்’ என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையை நினைத்ததைப் போல மாற்றுவேன் என்று நம்புபவரா நீங்கள்?
அ. ஆம்    ஆ. இல்லை

25.யாருக்காகவாது காத்திருக்க நேர்ந்தால் எரிச்சலடைவீர்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

26.‘மாற்றங்களே வினா, மாற்றங்களே விடை’ என்ற கோட்பாட்டின்படி, மாற்றங்களை சகஜமாகக் கையாளும் நபரா நீங்கள்?
அ. ஆம்    ஆ. இல்லை

27.மாதா மாதம் மணி அடித்தது போல சம்பளம் வரவில்லை என்றாலும் மனம் சோர்வடையாத நபரா நீங்கள்?
அ. ஆம்    ஆ. இல்லை

28.திடீரென்று உதவி- பொருளாதாரம் அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலான உதவி தேவைப்பட்டால் யாரிடமாவது
தயங்காமல் கேட்பீர்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

29.ஒருவேளை, அப்படிப் பொருளாக உதவியை பெறும் போது, சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் அதைத் திரும்பக் கொடுத்துவிடுவீர்களா?
அ. ஆம்    ஆ. இல்லை

30.உங்க நிறுவனம் அடுத்த 5 வருஷத்துல எங்க இருக்கும்னு ஒரு ஐடியா இருக்கா?
அ. ஆம்    ஆ. இல்லை

(இதில் அ.க்கு 1; ஆ.க்கு 0 என்ற பைனரி முறைப்படி போட்டு மொத்தமாகக் கூட்டுங்கள். 22 கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால், நீங்கள் தொழில்முனைவோர் ஆவதற்காகவே பிறந்தவர் என்றே சொல்லலாம்! 15-20 எடுத்திருந்தால், தொழில்முனைவிற்குப் பதில் ஃபிரான்சைஸில் கவனம் செலுத்துங்கள்.

அதற்கும் கீழ் உங்கள் மதிப்பெண் இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நிறுவனத்தில்  பணிபுரிவதே சிறந்த முடிவாக இருக்கும். உங்களிடம் தொழில்முனைவோருக்கான தகுதி இருக்கிறதுதானே? அடுத்தது, தொழில்முனைவுக்கான அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்….

Tags : Entrepreneur ,
× RELATED சன் டிவி குழும தலைவர் கலாநிதி...