×

முன்னாள் பாஜக எம்பியான ‘ராவணன்’ வேடத்தில் நடித்த நடிகர் மரணம்

மும்பை: முன்னாள் பாஜக எம்பியும், ராவணன் வேடத்தில் நடித்தவருமான நடிகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் இறந்தார். பிரபல தொலைக்காட்சி சீரியலான ராமாயணத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த் திரிவேதி (82) கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மும்பையின் தஹானுகர்வாடி சுடுகாட்டில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. இவர், கிட்டத்தட்ட 300 இந்தி மற்றும் குஜராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டில், இந்திய திரைப்பட சான்றிதழ் மத்திய வாரியத்தின்  (சிபிஎப்சி) செயல் தலைவராகவும் பணியாற்றினார். கடந்த 1991ம் ஆண்டில் பாஜக  எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தொலைகாட்சி சீரியல்களை பொருத்தமட்டில், ‘ராமாயணம்’ என்ற புராண சீரியலில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் திரிவேதியின் நடிப்பை இன்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், ‘விக்ரமும் பெத்தாளும்’ என்ற டிவி சீரியலிலும் நடித்தார். சின்னத்திரையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ராமாயணம் தொடர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, மீண்டும் இவரது நடிப்பு தலைப்புச் செய்திகளாக பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், அரவிந்த் திரிவேதி இறந்துவிட்டதாக வதந்திகளும் பரவின. ஆனால் அவர், நான் உயிருடன் இருப்பதாக மக்கள் முன் தோன்றி தெளிவுபடுத்தினார். அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Bhāja empiya ' ,Raven , Ravana
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...