×

நாகை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்பட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ₹50 ஆக உயர்வு

மன்னார்குடி: ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க கடந்தாண்டு மார்ச் 23ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டு, சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்க தொடங்கியது. ரயில் பயணிகளோடு அவர்களை வழியனுப்ப வருபவர்கள் எண்ணிக்கை அதிகம். இதை கட்டுப்படுத்த அதிக பயணிகள் வந்து போகும் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக திருச்சி ரயில்வே கோட்டம் உயர்த்தியது.

திருச்சி, தஞ்சை, விழுப்புரம், குடந்தை, மயிலாடுதுறை போன்ற ரயில் நிலையங்களில் இந்த கட்டண நடைமுறையில் உள்ளது. சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து தற்போது மேலும் 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை ரூ.50 ஆக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவினை வர்த்தக மேலாளர்  செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய உத்தரவு மூலம் மன்னார்குடி, நாகப்பட்டினம், நாகூர், சிதம்பரம், நீடாமங்கலம், திருவாரூர், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. இது, ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nagai ,Mannarukudi ,Talkcoat , platform fee
× RELATED வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை...