×

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு : வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்பிற்காக கவுரவம்!!

ஸ்டாக்ஹோம்:வேதியியல் துறைக்கான இந்தாண்டின் நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன் தினம் 2021ம் ஆண்டில் மருத்துவதுறைக்கான நோபல் பரிசும் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 விஞ்ஞானிகளுக்கு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஜெர்மனியின் பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.  இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படும்.

Tags : நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல்
× RELATED இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55...