கரூர் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை!: மர்மக்கும்பல் வெறிச்செயல்..!!

கரூர்: கரூர் அருகே பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபால் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது கூலி படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள கருப்பத்தூரை சேர்ந்தவர் 54 வயதான கோபால். பிரபல ரவுடியான இவர் மீது கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்துக்கு தோப்பில் மறைந்திருந்த 5க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், கோபாலை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

தகவல் அறிந்து சென்ற லாலாபேட்டை போலீசார், விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் கரூர் எஸ்.பி.சுந்தர வடிவேல் விசாரணையை மேற்கொண்டார். லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>