×

தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகள் தயாரிப்பு : உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மன்னிப்பு கோரினர்!!

டெல்லி : தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகள் தயாரித்ததாக எழுந்த புகாரில் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் பட்டாசு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு...

பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சிலர் செய்யகூடிய தவறுக்கு ஒட்டுமொத்த துறையையும் தண்டிப்பது சரியாகாது.

நீதிபதிகள் ; சிலர் அல்ல. நாட்டின் முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களே இதை செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை பட்டாசு தொழிற்சாலை கிடங்குகளில் ஏன் வைத்திருக்க வேண்டும் ?.. பேரியம் நைட்ரேட் ரசாயணத்தை சேமித்து வைப்பதை கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் : சிவகாசியில் மட்டும் பாட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.

நீதிபதிகள் : சரி தான் ஆனால் சுற்றுசூழல் மாசினால் பாதிக்கப்படும் நாட்டின் நிலைமை என்ன ?.. தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இல்லை. பிற உயிர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதிகள் :கட்டுப்பாடுகளை மீறி ஆயிரம் வாலா பட்டாசுகள் இன்றும் சந்தையில் விற்கப்படுகின்றன.பட்டாசு கட்டுப்பாடு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

தொடர்ந்து தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகள் தயாரித்ததாக எழுந்த புகாரில் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் பட்டாசு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இவ்வழக்கு 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Tags : Supreme Court , பேரியம்,பட்டாசுகள் ,தயாரிப்பு,உச்சநீதிமன்றம் ,மன்னிப்பு
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...