×

கெங்கவல்லி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைத்த பந்தல் அகற்றம்-தாசில்தாரிடம் வாக்குவாதம்

கெங்கவல்லி : கெங்கவல்லி தாலுகா கூடமலையை சேர்ந்தவர் மூர்த்தி(42). இவர் சவுண்ட் சிஸ்டம் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி, கூடமலை சாவடி முன்புறம் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இரவோடு இரவாக கீற்று பந்தல் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தார். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில், கலெக்டர் கார்மேகத்துக்கு புகார் சென்றது. அவர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றும்படி, கெங்கவல்லி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று இரவு 7 மணியளவில், தாசில்தார் வள்ளமுனியப்பன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். அப்போது மூர்த்தி, பந்தலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதன் அடியில் படுத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து தாசில்தார், போலீசார் மூலம் மூர்த்தியை அப்புறப்படுத்தி, விஏஓ ஆனந்தன் மற்றும் உதவியாளர்கள் மூலம் பந்தலை முற்றிலுமாக அகற்றினார்.

இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், ‘சாவடி கட்டிடம் மிக பழமையாக உள்ளது. அதன் முன்புறம் யாரும் ஆக்கிரமிக்க கூடாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். இதையும் மீறி மூர்த்தி இரவோடு இரவாக பந்தல் அமைத்துள்ளார். கலெக்டர் உத்தரவின் பேரில் பந்தல் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்த மூர்த்தி மீது, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Bandal Removal Dashildar ,Kengavalli , Kengavalli: Murthy (42) hails from Koodamalai in Kengavalli taluka. He has been in the sound system business. In this case, Murthy, Koodamalai
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்