×

கறவை மாடு ₹75 ஆயிரம் வரை விற்பனை பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம்-மழையிலும் களைகட்டிய வியாபாரம்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று வியாபாரம் களைகட்டி, கறவை மாடுகள் ₹75 ஆயிரம் வரை விலைபோனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிரபலமான கால்நடை சந்தைகளில் வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நடைபெறும் இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஊரகம், சித்ரதுர்கா, கோலார் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளைகள் என விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர பிராய்லர் கோழிகள், நாட்டுக்கோழிகள், ஆடுகள் போன்றவைகளும் கொண்டு வரப்படுகின்றன.

கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2 வாரங்களாக பொய்கை மாட்டுச்சந்தை மிகவும் மந்தமாக இருந்த நிலையில் நேற்று நடந்த சந்தை சூடுபிடித்தது. இங்கு அனைத்து வகையிலும் மொத்தம் 1500 மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதேபோல் 500க்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளும், பிராய்லர் கோழிகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. கறவை மாடுகளை பொறுத்தவரை ₹75 ஆயிரம் வரை விலைபோனது. இவ்வாறு மொத்தம் நேற்று ஒரு நாளில் மட்டும் ₹1 கோடி வரை வர்த்தகம் நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore: At the next fake cattle market in Vellore, traders weeded out yesterday and said dairy cows cost up to ₹ 75 thousand.
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...