×

சீனாவை போல் இந்தியாவிலும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடு வருமா?: கொரோனா முடக்கத்தால் ஆன்லைன் கேம்-க்கு அடிமையாகும் சிறார்கள்..ஆய்வில் அதிர்ச்சி..!!

சென்னை: கொரோனா முடக்கத்தால் சிறார்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வீடியோ கேம் விளையாட நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் கடந்த ஆண்டு தான் ஆன்லைன் வகுப்புக்காக முதன் முதலாக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தனர். முதல் 6 மாதங்களில் அந்த சிறுவன் தினமும் 7 மணி நேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி கிடந்தான். தங்கள் பிள்ளை தீவிரமாக படிப்பதாக நினைத்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிச்சம். படிப்பதற்கு பதிலாக அந்த சிறுவன் ஆன்லைன் கேமில் அதிக நேரம் செலவிட்டதே இதற்கு காரணம்.

அதனால் தோல்வி, கோபம், இயலாமை போன்றவற்றுக்கும் சிறுவன் ஆட்பட்டு இருப்பதை அறிந்த பெற்றோர் அவனை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது ஆன்லைன் விளையாட்டுக்கு சிறுவன் அடிமையாகி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பழக்கம் சிறுவர்களை வேகமாக தொற்றி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு என பெற்றோரை ஏமாற்றிவிட்டு ஆன்லைன் கேம் விளையாடும் சிறார்களுக்கு மனரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி கண் பார்வை குறைபாடு, முதுகு தண்டுவட பாதிப்பு போன்ற உடல் ரீதியிலான பிரச்சனைகளுக்கும் ஆளாக நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : India ,China , Corona freeze, video game, minors
× RELATED சொல்லிட்டாங்க…