×

கவி அருவியில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஆனைமலை : ஆனைமலை அருகே உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அருவி திறக்கப்பட்டதை தொடர்ந்து விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் மரக்கட்டைகள், பாறைகள் அடித்து வரப்பட்டதால் பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

மேலும் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் அருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kavi Falls , Anaimalai: Tourists are not allowed to visit Kavi Falls near Anaimalai due to floods
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு