×

நகராட்சி சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடு விற்பனை-வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் செயல்படுகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த வாரம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன.

வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. நேற்று நடந்த சந்தை நாளின்போது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழைக்காரணமாக, அப்பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்படும் மாடுகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. சுமார் 1500க்குள்ளான மாடுகளே வரப்பெற்றது. மாடு வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதில் பசுமாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.38 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.15ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானதாகவும், நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi: The Pollachi Municipal Cattle Market is open weekly on Tuesdays and Thursdays. Here,
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...