நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அதிகளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பாஜக அரசு பணியமர்த்துகிறது : குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!!

பெங்களூரு : நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அதிகளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பாஜக அரசு பணியமர்த்தி இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.2016ம் ஆண்டு மட்டும் 676 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வது பாஜகவின் எண்ணம் இல்லை என்று தெரிவித்த அவர், நாட்டை மனுதர்ம காலத்திற்கு எடுத்துச் செல்வதே அவர்களது எண்ணம் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டினார்.நாடு முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பொதுப்பணித்துறையில் அதிகாரிகளாக ஊடுருவச் செய்து பாஜக தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், இதுவரை 4000 பாஜக தொண்டர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளாக நாடு முழுவதும் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இந்த குற்றச் சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>