சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் : ஒன்றிய அரசு

டெல்லி : சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு கடந்த ஜூலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிக்கையை வெளியிட்டது..ஆனால், அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு, அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கபபடுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதாவது நீட் எஸ்எஸ் தேர்வில் 60% கேள்விகள் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சார்ந்தவையாகவும் 40% கேள்விகள் பொது மருத்துவம் சார்ந்தவையாகவும் இருக்கும்.ஆனால் கடைசி நேரத்தில் நீட் எஸ்எஸ் தேர்வில் 100% வினாக்களும் பொது மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.  

 இதையடுத்து 41 முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள், சுப்ரீம்கோர்ட்டில் நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பிவி நாகரத்னா விசாரித்து வருகின்றன. கடந்த முறை விசாரணையின் போது, கடைசி நேரத்தில் நீட் எஸ்எஸ் வினாத்தாள் முறையை மாற்றியதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நீட் எஸ்எஸ் புதிய வினாத்தாளை 2022ல் செயல்படுத்தினால் வானம் இடிந்தாவிடம் என்றும் காட்டமாக ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே உள்ள நீட் -எஸ்எஸ் வினாத்தாள் முறையிலேயே இந்த ஆண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

Related Stories:

More
>