ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை விட மோடியின் ஏகாதிபத்தியம் கடுமையானதா?: உ.பி. விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து கே.எஸ். அழகிரி சாடல்..!!

சிதம்பரம்: உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது ஜாலியான் வாலாபாக் படுகொலையை விட மோசமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார். லக்கிம்புர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயினரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது பஞ்சாபில் ஜாலியான் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது என்றார்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்கு அரசு அனுமதிக்கவில்லை. ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை விட மோசமானது என்பதை ஜனநாயகத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டினார். மேலும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை விட மோடியின் ஏகாதிபத்தியம் கடுமையானதா? கொடுமையானதா? என்றும் கே.எஸ். அழகிரி வினவியிருக்கிறார்.

Related Stories:

More
>