×

அதிமுக கோஷ்டி மோதல் வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

திருவில்லிபுத்தூர்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி காரில் சென்றார். வழியில் அவருக்கு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். காரில் அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இருந்தார். அப்போது, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரான ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் ராஜேந்திரபாலாஜி, ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செஷன்ஸ்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர்  திருமலையப்பன், முன்ஜாமீன் மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தனது ஆட்சேபனையை  தெரிவித்தார். இதற்கிடையே ராஜேந்திரபாலாஜி வழக்கறிஞர்கள் முன்ஜாமீன்  மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags : Rajendrapalaji ,AIADMK , AIADMK, factional clash, Rajendrapalaji, pre-bail
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...