லோக் ஜனசக்தியில் பிளவு சிராக் பஸ்வான், பராஸுக்கு தனித்தனி கட்சி, சின்னங்கள்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் குஷேஷ்வர் அஸ்தான், தாராப்பூர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சியில் சிராக் பஸ்வான், பசுபதி குமார் பராஸ் ஆகியோர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், கட்சியின் பெயரையும், அதன் ‘பங்களா’ சின்னத்துக்கும் உரிமை கோரி இருவரும் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதன் மீது விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், ‘இருவரும் லோக் ஜனசக்தி என்ற கட்சி பெயரையும், அதன் ‘பங்களா’ சின்னத்தையும் இறுதி முடிவு எடுக்கும் வரை பயன்படுத்த கூடாது’ என்று உத்தரவிட்டது.

 இந்நிலையில், இவர்கள் இருவருக்கும்  தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், பீகார் மாநிலத்தில் நடக்கவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், சிராக் பஸ்வான் பிரிவுக்கு ‘லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சி பெயரும், ‘ஹெலிகாப்டர்’ சின்னமும் ஒதுக்கப்படுகிறது. அதேபோன்று பசுபதி குமார் பராஸின் கோரிக்கையை ஏற்று, அவரது பிரிவுக்கு ‘ராஷ்ரிய லோக் ஜனசக்தி கட்சி’ என்ற கட்சி பெயரும், ‘தையல் இயந்திரம்’ சின்னமாகவும் ஒதுக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More