சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி நியமனம்

புதுடெல்லி: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து ஒன்றிய அரசுக்கான கூடுதல் செயலாளர் ரஜிந்தர் கஷ்யாப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள பரேஷ் ரவிசங்கர் உபாத்யா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற நீதிபதி என்வி.ரமணா ஆகியோரின் உத்தரவுப்படி இந்த இடமாற்றம் செய்யப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்கும்படி நீதிபதி பரேசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>