
திருவனந்தபுரம்: மலையாளத்தில் ‘மகேஷின்டெ பிரதிகாரம்’, ‘கட்டப்பனயிலெ ரித்விக் ரோஷன்’, ‘ஹனி பீ 2.5’, ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’ உள்பட பல படங்களில் நடித்தவர், லிஜோமோள் ஜோஸ். தமிழில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘தீதும் நன்றும்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது சூர்யா நடிக்கும் ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்து வருகிறார். லிஜோமோள் ஜோசுக்கும், கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவருக்கும் நேற்று முன்தினம் கேரளாவில் திருமணம் நடந்தது.