ஜப்பான், ஜெர்மன், இத்தாலியை சேர்ந்த 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: பருவநிலை பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஜப்பான், ஜெர்மனி, இத்தாலியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன் தினம் 2021ம் ஆண்டில் மருத்துவதுறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாபவுடியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறவிக்கப்பட்டது. இதை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சின் பொதுச் செயலாளர் கோரன் ஹான்சன் அறிவித்தார். அதன்படி ‘பருவநிலையில் பூமியின் இயற்பியல் மாதிரியாக்கம், மாறுபாட்டை அளவிடுதல், புவி வெப்பமடைதலை கணித்தல்’ ஆகிவற்றில் பணியாற்றியதற்காக ஜப்பான் விஞ்ஞானி சியுகுரோ மனாபே (90), ஜெர்மனி விஞ்ஞானி கிளாஸ் ஹாசெல்மேன் (89) ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பரிசின் இரண்டாம் பாதி, உடல் அமைப்பில் அணுவின் ஏற்ற இறக்க இடைவெளியை கண்டறிந்ததற்காக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி ஜியார்ஜியோ பாரிசி (73) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேருக்கும் தங்கப் பதக்கமும், பரிசுத்தொகையான ரூ.8 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும்.

Related Stories: