மதவாத கட்சியில் இருந்தது தவறு மொட்டையடித்து கொண்ட திரிபுரா பாஜ எம்எல்ஏ: மம்தாவுக்கு பாராட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாய், மண், மக்களுக்கு உண்மை தலைவராக விளங்குகிறார் என்று திரிபுரா பாஜ எம்எல்ஏ புகழாரம் சூட்டியுள்ளார். திரிபுராவின் தலாய் மாவட்டம் சுர்மா தொகுதி எம்எல்ஏ ஆஷிஷ்தாஸ். இவர் கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலில் மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘மதவாத கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொண்டதற்காக தலைமை மொட்டை அடித்துக் கொண்டேன். மேற்கு வங்க முதல்வர் தாய், மண், மக்களுக்கு உண்மை தலைவராக விளங்குகிறார். அவர் எதிர்காலத்தில் பிரதமரானால் ஒவ்வொரு வங்காளிக்கும் பெருமை. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி அனைவரின் இதயத்தையும் கவர்ந்தார்.

ஆனால், அவர் தனது வாக்குறுதிகளை தவறிவிட்டார். தனது புதிய அரசியல் இன்னிங்ஸ் என்று கூறிகொண்டார். ஆனால், அவர் பாஜவை விட்டு வெளியேறுவாரா என்று கூறவில்லை’. என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதையடுத்து 2023 தேர்தலில் திரிபுராவில் நடக்கவுள்ள தேர்தலை மனதில் கொண்டு அக்கட்சி வியூகம் வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது. காளிகாட்டில் மம்தா வீட்டு அருகே எனக்கு வேலை இருக்கிறது என்று பாஜ எம்எல்ஏ கூறியுள்ளதால், அவர் திரிணாமுல் காங்கிரசில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>