திமுக வேட்பாளர் ராஜாராமகிருஷ்ணனை ஆதரித்து கொட்டும் மழையில் எம்எல்ஏ தாயகம் கவி தீவிர பிரசாரம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 18வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கு போட்டியிடும் சுஜாதா ஜெய்சங்கர் ஆகியோரை ஆதரித்து சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி, ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் உள்பட திமுகவினர் ஓணம்பாக்கம் கிராமத்தில் நேற்று கொட்டும் மழையில், நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர். ஓணம்பாக்கம், நெசப்பாக்கம், அரியனூர் ஆகிய ஊராட்சி விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், முதியவர்கள், இளைஞர்களை நேரடியாக சந்தித்து, எம்எல்ஏ தாயகம் கவி பேசியதாவது.

செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால், அரசின் சலுகைகளை உடனுக்குடன் பெற்று தருவார். ஊராட்சிகளில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்ககான அரசு உதவிகளை உடனுக்குடன் பெற்றுத்தருவார். தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்பட கட்டமைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார் என்றார்.

இதில், நிர்வாகிகள் சசிகுமார், ஆர்.சங்கர், ஆர்.செல்வநிதி ராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் ஜெய்சங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வபிரகாஷ், ஓணம்பாக்கம் நிர்வாகிகள் கார்த்திக், லோகநாதன், நாராயணன், பெருமாள், எத்திராஜ், செல்வமூர்த்தி, நடராஜன், சுரேஷ், பிரேமா தாசன், கார்த்திக், கிரிபிரசத், பெரிய வெண்மணி நிர்வாகிகள் மணி, சேகர், ஜெயபால், முத்து, மனோகரன், பிரகாஷ், அரியனூர் நிர்வாகிகள் வாசு, தட்சிணாமூர்த்தி, நெசப்பாக்கம் நிர்வாகிகள் தனசேகரன், அசோக்குமார், மேனகா, ஏகாம்பரம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>