டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் துளசிதாஸ் நேற்று முன்தினம் கடையை விட்டு வெளியே வரும்போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மேலும் மற்றொரு விற்பனையாளர் ராமு வெட்டு காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், டாஸ்மாக் கடை ஊழியர் துளசிதாசை கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

More
>