×

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், 2021-22ம் கல்லியாண்டில் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான முதலாமாண்டு பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் இணையவாயிலாக கடந்த 20ம் தேதி தொடங்கியது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in. என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், இன்றுடன் விண்ணப்பம் முடிவடைகிறது. மேலும், விவரங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-2235 1014/1015 மற்றும் care@tneaonline.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.

Tags : B.Arch ,Anna University , Today is the last day for B.Arch student admission at Anna University
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது