கல்வித்துறை தொடர்பான தகவல்களை தர வேண்டும்: பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழக கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் கொடுத்த மனுவின் பேரில் உரிய காலக் கெடுவுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் இருந்து தகவல் ஏதும் வரவில்லை என்று மேற்கண்ட சங்கர் என்பவர் மேல்  முறையீடு செய்துள்ளார். எனவே, மேற்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர்கள், இந்த மனுதாரர் கேட்கும் தகவல்களை சார்நிலை அலுவலகங்களில் இருந்து தொகுத்து தங்கள் அலுவலகங்களில் இருந்தே மனுதாரருக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

More
>