திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி குமரியில் 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

மார்த்தாண்டம்: குமரியில் 9ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தடிக்காரன்ேகாணம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு, 17 வயதில் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். படிப்பு சரியாக வராததால் சிறுமி 9ம் வகுப்புடன் பள்ளிக்கூடம் செல்வதை பாதியில் நிறுத்தி கொண்டார். பின்னர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

இதேபோல் அஞ்சுகிராமம் அருகே காணிமடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். மாணவி ஜவுளி கடைக்கு வருவதை தினசரி பார்க்கும் வாய்ப்பு சிறுவனுக்கு கிடைத்து உள்ளது. அதன்படி 2 பேரும் தினசரி சந்தித்துக் கொண்டனர். அப்போது சிறுமியிடம் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலி என்று கட்டாயபடுத்தி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுவனின் காதலுக்கு மாணவியுடம் சம்மதித்து உள்ளார். இதற்கிடைே ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்வதை மாணவி நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருப்பதை சிறுவன் தெரிந்து கொண்டான். தொடர்ந்து அடிக்கடி வீட்டுக்கு சென்று காதலியை சந்திக்க தொடங்கி இருக்கிறான்.

அதன்படி கடந்த 21.4.2021ம் தேதியும் மாணவியின் வீட்டுக்கு வழக்கம் போல் சென்று இருக்கிறான் சிறுவன். பின்னர் 2 பேரும் வழக்கம் போல் பேசி கொண்டு இருந்து உள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவிக்கு லேசான தலை சுற்று வந்து இருக்கிறது. உடனே பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்து இருக்கிறது. இது குறித்து சிறுமி உடனே தாயாரிடம் கூறி உள்ளார்.

அதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் சைல்டு லைனுக்கு தகவல் கொடுத்து உள்ளார். உடனே அதிகாரிகள் வந்து விசாரித்து உள்ளனர். தொடர்ந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் றோஸ்மேரி, சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசி விசாரித்து வருகிறார். தற்போது சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>