×

பிரியங்கா காந்தி சந்திக்க சென்ற சத்தீஸ்கர் முதல்வர் தடுத்து நிறுத்தம் : லக்னோ ஏர்போர்ட்டில் தரையில் அமர்ந்து முதல்வர் தர்ணா!! .

டெல்லி : உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே விவசாயிகள் மீது கார் ஏற்றும் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கைது செய்யப்பட்டு சீத்தாம்பூர் விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை சந்திக்க சென்ற சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீத்தாம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர், விமான நிலையத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட லக்கிம்பூரில் மட்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சீத்தாம்பூரில் பிரியங்காவை சந்திக்க சென்ற தன்னை தடுத்து நிறுத்தியது சட்ட விரோதம் என்று புபேஷ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும் சத்தீஸ்கர் முதல்வர் சாடி உள்ளார். 


Tags : Chhattisgarh ,Chief Minister ,Priyanka Gandhi , பிரியங்கா காந்தி ,சத்தீஸ்கர், முதல்வர்,லக்னோ
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...