×

இந்தியாவில் மருத்துவக் கல்வியும் ஒழுங்காற்று விதிகளும் வணிகமயமாகிவிட்டன: உச்சநீதிமன்றம் வேதனை!!

டெல்லி : நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகி விட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கடந்த ஜூலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிக்கையை வெளியிட்டது..ஆனால், அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு, அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கபபடுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதாவது நீட் எஸ்எஸ் தேர்வில் 60% கேள்விகள் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சார்ந்தவையாகவும் 40% கேள்விகள் பொது மருத்துவம் சார்ந்தவையாகவும் இருக்கும்.ஆனால் கடைசி நேரத்தில் நீட் எஸ்எஸ் தேர்வில் 100% வினாக்களும் பொது மருத்துவம் சார்ந்ததாகவே இருக்கும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.  

 இதையடுத்து 41 முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள், சுப்ரீம்கோர்ட்டில் நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பிவி நாகரத்னா விசாரித்து வருகின்றன. கடந்த முறை விசாரணையின் போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயார் ஆவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு வளிக்கம் அளித்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீட்-எஸ்எஸ் தேர்வை மாற்றிக் கொண்டு இருப்பது நாட்டின் மருத்துவக் கல்வி தரத்திற்கு உகந்த செயல் அல்ல. நவம்பரில் நடைபெற வேண்டிய தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் பாடத் திட்டத்தை மாற்றம் செய்கிறார்கள். மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் ஜனவரி மாதம் தேர்வை ஒத்திவைக்கிறார்கள். இவை எதுவும் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நல்லதாக தெரியவில்லை.
நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகிவிட்டது. மருத்துவக் கல்வியும் ஒழுங்காற்று விதிகளும் வணிகமயமாகிவிட்டன.மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பவே அவசரம் காட்டப்படுகிறது.தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கம் தெரிகிறது.பல ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகிவரும் மருத்துவர்களுக்கு வினாத்தாள் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, என்று காட்டமாக தெரிவித்த நிலையில் வழக்கை ஒத்திவைத்தனர்.


Tags : India ,Court , சூப்பர் ஸ்பெஷாலிட்டி ,நீட் தேர்வு,ச்சநீதிமன்றம், வேதனை
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்...