ராஜஸ்தானுடன் இன்று மோதல்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை?

ஷார்ஜா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்த்து,  மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, டெல்லி, பெங்களூர் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ள நிலையில் இன்றைய போட்டி, இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது.

தற்போது புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 7வது இடத்திலும் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறும். அதன் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய ஆட்டத்திறன், சிறப்பாகவே உள்ளது எனலாம். ஓபனர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட எவின் லூயிஸ், கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் துபே, டேவிட் மில்லர் என எல்லோருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். முஸ்டாபிசுர் பந்துவீச்சில் மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் சீனியர் வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.  கேப்டன் ரோகித் சர்மா உட்பட சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, பொலார்டு மற்றும் இஷான் கிஷான் என சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், நடப்பு தொடரில் அனைவரும் மோசமாகவே ஆடி வருகின்றனர். பந்துவீச்சிலும் பும்ரா உட்பட அனைவருமே இத்தொடரில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஐபிஎல்லில் இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 12 போட்டிகளில் மும்பை அணியும், 11 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories:

More
>