கொரோனா தடுப்பூசி பணிகளில் செவிலியர்களின் பங்களிப்பிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு!!

சென்னை : தமிழ்நாட்டில் அக்டோபர் 10ம் தேதி 5ம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 30,000 இடங்களில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேரில் சென்று மா. சுப்ரமணியன் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் 64% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் 25% பேருக்கு 2ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில்  செவிலியர்கள் முழு அளவில் ஆர்வமுடன் பங்கேற்று வருவதாகவும் செவிலியர்களுக்கு விருப்பமான நாட்களில் வார விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் அல்லது வேறு பணிகளில் செவிலியர்களை பயன்படுத்துவது குறித்து செவிலியர்களிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>