×

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த 'அண்ணாத்த'பாடல்!: 20 மணி நேரத்தில் 33 லட்சம் பேர் பார்த்து பரவசம்..!!

சென்னை: ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவான அண்ணாத்த படத்தின் முதல் பாடல் நேற்று மாலை ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது. அண்ணாத்த என தொடங்கும் பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடல் வெளியான 20 மணி நேரத்தில் 33 லட்சம் பேர் அண்ணாத்த பாடலை பார்த்துள்ளனர்.

தொடர்ந்து லட்சக்கணக்கானோர் பாடலை பார்த்து வருவதால் யூடியூப் டிரெண்டிங்கில் அண்ணாத்த பாடல் முதலிடத்தில் உள்ளது. குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்துவிட்டது. இந்த படத்தில் ரஜினி ஒரு கிராமத் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் இந்த வேடத்தில் அவரைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Tags : YouTube , YouTube Trending, 'Annatha', topped
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!