×

பழநி பகுதியில் தொடர் மழையால் உழவுப்பணி துவக்கம்

பழநி : தொடர் மழையால் பழநி பகுதியில் உழவுப்பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாசன வசதி உள்ள விவசாய நிலங்களில் மட்டுமின்றி, மானாவாரி நிலங்களில் விவசாயப் பணிகள் துவங்கி உள்ளன. பழநி அருகே, ஆயக்குடி பகுதியில் மானாவாரி நிலங்களில் உழவுப்பணிகள் துவங்கி உள்ளன.

பல இடங்களில் பாரம்பரிய முறைப்படிம மாடுகளைக் கொண்டு உழவு செய்யும் பணி நடந்து வருகின்றன. இது குறித்து ஆயக்குடியைச் சேர்ந்த சிவஞானம் கூறியதாவது:கடந்த சில தினங்களாக பெய்த நல்ல மழையின் காரணமாக நிலம் ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, தற்போது உழவுப்பணியை துவங்கி உள்ளோம். தமிழக அரசு உழவுப்பணிகளை கருத்தில் கொண்டு, விதை, உரம் போன்றவற்றை மானிய விலையில் வழங்க முற்பட வேண்டும். பயிர் காப்பீட்டிற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.   


Tags : Palani , Palani: Due to continuous rains, farmers have started plowing in Palani area. Evening for the last few days in Palani area
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது