குன்னூர் காட்டேரி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் 2வது சீசன் களைகட்டி வருவதால் இதமான கால சூழ்நிலையை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது காட்டேரி பூங்கா. இந்த பூங்கா இயற்கை எழில் சூழ்ந்து அருவிகளின் அருகே அமைந்துள்ளது. மேலும் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அதிகளவிலான பூஞ்செடிகளும்,பறவைகளும் உள்ளன.  

வெட்டிங் போட்டோகிராபர்களின் முக்கிய இடமாக இப்பூங்கா உள்ளது. திருமணமான தம்பதிகளை புகைப்படங்கள் எடுக்க மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வந்து செல்கின்றனர். ஊட்டி வரக்கூடிய தம்பதிகள் பெரும்பாலும் காட்டேரி பூங்காவினையே தேர்வு செய்கின்றனர். அதன் அருகில் ரண்ணிமேடு ரயில் நிலையம் உள்ளதால் அவர்கள் வைத்திருக்கும் கேமராக்களுக்கு விருந்தாகவே அமைகிறது. நாள்தோறும் சுற்றுலா பயணிகள் காட்டிலும் இது போன்ற வெட்டிங் போட்டோகிராபிக்காக அதிகளவிலான புதுமணத் தம்பதியர் காட்டேரி பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

தற்போது சாரல் மழையுடன் இதமான காலநிலை நிலவி வருவதால் பூங்கா பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் அவ்வபோது மந்தமான வெயில் நிலவுகிறது.

இந்த கால நிலையில் புகைப்படங்கள் எடுக்க தம்பதிகள் மட்டுமின்றி புகைப்பட கலைஞர்களும் ஆர்வமுடன் பூங்காவை வலம் வருகின்றனர். இதனால் பூங்கா அருகே கடை வைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More