×

பயோ பபுள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியா செல்ல தயக்கம் : ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு நடைபெறுவதில் சந்தேகம்!!

சிட்னி : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு திட்டமிட்டவாறு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1882ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரசித்தி பெற்றது. கிரிக்கெட்டை தோற்று வித்ததாக கூறிக்கொள்ளும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரில் பட்டம் வெல்லும் அணி உலக சாம்பியன் ஆகவே ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. இந்த ஆண்டு அத்தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள பயோ பபுள் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளால் இங்கிலாந்து வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேப்டன் ஜோ ரூட் உள்ளிட்ட சிலர் ஆஸ்திரேலியா செல்ல தயக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகிகள் கூடி இவ்வாரத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : England ,Australia ,Ashes , Bio Bubble, England, Players, Australia
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...