×

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தன்னை 28 மணி நேரமாக காவலில் வைத்திருப்பதாக பிரியங்கா காந்தி ஆவேசம்!!

டெல்லி : முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தன்னை 28 மணி நேரம் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் பிரியங்கா காந்தி, விவசாயிகளை கொன்றவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளை கார் ஏற்றி கொல்லப்பட்டதால் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறைகளமாக மாறியது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு சித்தாபூர் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிரியங்கா காந்தி தான் தங்கி இருந்த விடுதி அறையை சுத்தம் செய்யும் காட்சி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு இல்லங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் காரால் மோதி தள்ளப்படும் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி பகிர்ந்துள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் 28 மணி நேரமாக அடைத்துவைத்து இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பிரியங்கா, இதுவரை விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்றும் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Priyanka Gandhi , பிரியங்கா காந்தி,முதல் தகவல் அறிக்கை
× RELATED இந்திய மக்கள் மாற்றத்தை...