இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா; 263 உயிரிழப்பு: 29,639 பேர் டிஸ்சார்ஜ்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.49 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.38 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,346 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக உயர்ந்தது.

* புதிதாக 263 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,49,260 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,50,886  ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,52,902  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 91,54,65,826 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 72,51,419 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.93% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.75% ஆக குறைந்துள்ளது.

Related Stories:

More