×

151.03 கிமீ வேகத்தில் பந்து வீசி காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் மிரட்டல்

துபாய்: கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 151.03 கிமீ வேகத்தில் பந்து வீசி சன்ரைசர்ஸ் அணியின் ‘‘வேகம்’’ உம்ரான் மாலிக் அசத்தி உள்ளார்.ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும், வர்ணனையாளர்கள், வீரர்கள், ரசிகர்கள் ஒருவரின் பெயரை ஆச்சரியத்துடன் உச்சரித்தனர். அவர், சன்ரைசர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு பதிலாக அணியில் இணைந்த 21 வயதான உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த போட்டியில்தான் முதன்முதலாக ஐபிஎல்லில் அறிமுகம் ஆனார்.

போட்டியின்போது இவர் வீசிய ஒரு பந்து, மணிக்கு 151.03 கி.மீ., வேகத்தில் புயலாக வந்து எதிரணி வீரரை மிரட்டியது. இதுவே, இந்த ஐபிஎல்லில் இந்திய வீரர் ஒருவர் வீசிய அதிவேகப்பந்தாகும். இந்த போட்டியிலே இரு முறை மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். ரசிகர்களும் யார் இந்த உம்ரான் மாலிக் என வலைத்தளங்களில் தேடத்துவங்கினார். இந்த தொடரை பொறுத்தவரை கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நியூசிலாந்தை சேர்ந்த  லூகி பெர்க்யூசன் மணிக்கு 152.75 கிமீ வேகத்தில் வீசியதே அதிவேக பந்து வீச்சாக இடம் பெற்றுள்ளது குறிப்பித்தக்கது.

Tags : Kashmir Express ,Umran Malik , Kashmir Express Umran Malik threatens to throw ball at 151.03 kmph
× RELATED டி.20 உலகக்கோப்பை அணியில் ஷமிக்கு பதிலாக உம்ரான்மாலிக்?.. பிசிசிஐ ஆலோசனை