×

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்பு

டோக்கியோ:  ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா பொறுப்பேற்றுக்கொண்டார். ஜப்பானின் பிரதமராக யோஷிடே சுகா பதவி வகித்து வந்தார். ஆனால் கொரோனா நோய் தொற்று பரவலை கையாண்ட விதம் காரணமாக அவர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் அவருக்கான ஆதரவும் குறைந்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் கடந்த வாரம் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தேர்தலை நடத்தியது. இதில் அக்கட்சியின் தலைவராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் கிஷிடா வெற்றி பெற்றார். இதனையடுத்து நேற்று புமியோ கிஷிடா புதிய  பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. புதிதாக 13 பேர் முதல் முறையாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜப்பான் புதிய பிரதமருக்கு மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘ இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Pumio Kishida ,Japan , Pumio Kishida becomes Japan's new prime minister
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...