செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து தா.மோ.அன்பரசன் தீவிர பிரசாரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில், திமுக சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 5வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி செயலாளர் மற்றும் செங்கல்பட்டு தொகுதி  தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜன் மனைவி பூங்கோதை ராஜன், 12வது வார்டு  ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சத்யா ஸ்ரீ ராம் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திலும், காயராம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  சசிகலா ஏழுமலை, கருநீலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேதாச்சலம் ஆகியோர் ஏணி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

இததொடர்ந்து தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நேற்று காலை முதல், கொளுத்தும் வெயிலில் கூடுவஞ்சேரி அடுத்த காயராம்பேடு பகுதியில் சூறாவளி பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது, பேசிய அவர், திமுக சார்பில். போட்டியிடும்  வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால், உங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும். அதை, தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே  முடியும். இந்த பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்றுவேன்.  நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தருவேன். அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதிகள், மினி பஸ் வசதி செய்வேன். இங்கு சமூக நலக்கூடம் அமைத்து, விரைவில் திறந்து வைப்பேன் என உறுதியளித்தார். இந்நிகழ்வில், எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>