நாட்டில் 70% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில்,‘‘வலிமையான நாடு, விரைவான தடுப்பூசி, இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா புதிய அடையாளத்தை அடைந்துள்ளது. இந்தியாவை இதேபோன்று பாதுகாப்பாக வைத்திருப்போம். கொரோனாவுக்கு எதிராக போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வடகிழக்கு பகுதிகளுக்கு டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகம் செய்வது நேற்று தொடங்கியது. இதை  தொடங்கி வைத்து மாண்டவியா கூறுகையில், ‘‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட டிரோன் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். பிஷ்னுபுர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து 15கி.மீ. வான்வழிதொலைவில் இருக்கும் லோக்டாக் பகுதிக்கு 12 முதல் 15நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது.  டிரோன் மூலமாக விநியோகிக்கப்பட்ட கொரோனா தடுப்புமருந்தில் 10 பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோசும், 8  பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி” என்றார்.

Related Stories:

More
>