பத்ம விருது தேர்வில் தெலங்கானா புறக்கணிப்பு: முதல்வர் சந்திரசேகர் ராவ் வருத்தம்

ஐதராபாத்: பத்ம விருத்துக்காக தேர்வு செய்வதில் தெலங்கானா மாநிலம் புறக்கணிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வருத்தம் தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா மேம்பாடு குறித்த கேள்வி நேரத்தின்போது பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ‘சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தேன். அப்போது பத்ம விருது பெறுபவர்களை தேர்வு செய்வதில் தெலங்கானா மாநிலம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தேன். பத்மஸ்ரீ விருதுகளை தேர்வு செய்வதற்கான பட்டியலை மாநில அரசு அனுப்ப வேண்டுமா அல்லது வேண்டாமா’? என கேட்டேன். அரசு அனுப்பிய பட்டியலில் இருந்த பெயர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எங்கள் ‘மாநிலத்தில், கலைஞர்கள் இல்லையா, தனித்துவமான ஆளுமை கொண்டவர்கள் இல்லையா, பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியான நபர்கள் யாரும் இல்லையா? ஏன் எங்களை புறக்கணிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள், நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இது குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர்.’ என்றார்.

Related Stories: